சிறையில் சசிகலா அட்டகாசம்: அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ

Report Print Santhan in இந்தியா

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை காண வருபவர்களின் எண்ணிக்கை சிறை விதிகளை மீறியுள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை காண்பதற்கு பலரும் சென்று வருகின்றனர்.

இதில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள், டி.டி.வி.தினகரன் மற்றும் வழக்கறிஞர்கள் எனப் பலரும் சசிகலாவை பார்த்து விட்டு வருகின்றனர்.

ஆனால் சிறை விதிப்படி ஒரு மாதத்திற்கு இரண்டு பார்வையாளர்கள் மட்டுமே தண்டனைக் கைதிகளை பார்க்க அனுமதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.

இதனால் பொது நல ஆர்வலர் ஒருவர் தகவல் உரிமைச் சட்டம் மூலம் சிறையில் இருக்கும் சசிகலாவைக் காண வருவோரின் விவரப் பட்டியலைக் கேட்டுள்ளார்.

அதில் இருந்து கிடைத்த தகவலின் படி, சசிகலாவை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 19 பேர் 14 முறை காண வந்துள்ளனர். இது சிறை விதிகளை மீறிய செயல் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் சிறை நிர்வாகம், சிறைத்துறை அதிகாரியின் தனிப்பட்ட ஒப்புதலுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments