குரங்காக வாழ்ந்து வந்த 8 வயது சிறுமி: மனிதர்களை கண்டு பயந்து ஓடும் பரிதாபம்

Report Print Santhan in இந்தியா

உத்திரப்பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவர் சரணாலயத்தில் குரங்களுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் Katarniaghat சரணாலயத்தில் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 8 வயது சிறுமி ஒருவர் குரங்களுடன் ஒன்றாக இருந்துள்ளார்.

இதைக் கண்ட பொலிசார் அச்சிறுமியை மீட்பதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் குரங்குகளோ சிறுமியை மீட்க விடாமல் கடிக்க முயற்சி செய்துள்ளது. குரங்கைப் போன்றே சிறுமியும் இவர்களை கடிக்க முயன்றுள்ளார்.

அதன் பின்னர் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பொலிசார் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறுகையில், குரங்குகளிடம் இருந்து சிறுமியை மீட்க முயன்றபோது, குரங்குகள் தன்னை நோக்கி சீரியதாகவும், அதேபோல் சிறுமியும் செய்ததாகவும் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதித்த சிறுமி பேசவும் தெரியாமல், மொழியும் புரியாமல் மிகவும் கஷ்டப்பட்டுவருதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் உள்ள மனிதர்களை கண்டு அஞ்சுவதாகவும் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி சிறுமி எந்த ஒரு உணவையும் நேரடியாக வாயால் உண்பதாகவும், விலங்குகளை போல் இரண்டு கை மற்றும் கால்களை சேர்த்து மண்டிபோட்டு நடப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் சிறுமிக்கு தொடந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதால், அவரது மாற்றத்தில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments