வெளிநாட்டு பெண் பயணியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட தமிழக இளைஞர்

Report Print Raju Raju in இந்தியா

துபாயிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் ஸ்பெயின் நாட்டின் பெண்ணிடம் சென்னை இளைஞர் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

துபாயிலிருந்து எமரேட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

விமானத்தில் இருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் அருகிலிருந்த தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த வாலிபரிடம் கழிவறை எங்குள்ளது என கேட்டுள்ளார்.

அப்போது வாலிபர் கழிவறை திசையை பெண்ணிடம் கூறிய போது அவர் மீது வாலிபரின் கை பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பயணி வேண்டுமென்றே இளைஞர் தன்னிடம் சில்மிஷம் செய்ததாக கூறினார்.

இதை மறுத்த இளைஞர் தன் கை தவறுதலாக மேலே பட்டதாக கூறியுள்ளார்.

விமானம் சென்னை வந்ததும் நீங்கள் புகார் செய்யுங்கள், வாலிபரை பொலிசில் ஒப்படைக்கிறோம் என அதிகாரிகள் பெண்ணிடம் கூறியுள்ளனர்.

பின்னர் விமானம் இறங்கியதும் அவர் பொலிசில் ஒப்படைக்கபட்டார். ஆனால் சம்மந்தபட்ட ஸ்பெயின் பெண் புகார் கொடுக்க வராததால் இளைஞரை பொலிசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments