ரம்பாவை வெகுவாக பாராட்டிய நீதிபதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கலக்கிய நடிகை ரம்பாவுக்கும், கனடா தொழிலதிபரும் இலங்கைத் தமிழருமான இந்திரகுமாருக்கும் கடந்த 2010-ல் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு லாண்யா, சாஷா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்பதாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து வாழ்ந்த ரம்பா, இந்து திருமணச் சட்டம் பிரிவு 9-ன் பிரகாரம், தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் மாதம் ரூ. 2.5 லட்சம் இடைக்கால நிவாரணம் தரக்கோரியும் சென்னை மாவட்ட 2-வது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் ரம்பா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது, நடிகை ரம்பா மற்றும் அவரது கணவர் இந்திரகுமாருக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையை சமரச தீர்வு மையம் மூலமாக பேசி தீர்த்துக் கொள்ள நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

அதன்படி இருவரிடமும் சமரச தீர்வு மைய வழக்கறிஞர்கள் மற்றும் இருதரப்பு வழக்கறிஞர் களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தனர்.

நீதிபதிகள் முன்பாக ஒன்றாக ஆஜராகிய ரம்பாவும், அவரது கணவர் இந்திரகுமாரும், தாங்கள் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்தனர்.

இருவரின் முடிவை கேட்ட நீதிபதிகள் சந்தோஷமடைந்து, இருவரையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மேலும்,ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என வாழ்த்தி அறிவுரை கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments