ஓட்டுக்கு பணம் கொடுத்த தினகரன்: தட்டிகேட்ட மக்களுக்கு அடி உதை

Report Print Raju Raju in இந்தியா

ஆர்.கே நகரில் ஓட்டுக்கு பணம் கொடுத்த டிடிவி தினகரன் ஆட்களை தட்டி கேட்ட பொது மக்களை அவர்கள் அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பிரசாரம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. அதிகளவில் மக்களுக்கு பணம் கொடுப்பதாகவும் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.

இந்த புகாரில் அதிகம் சிக்குவது டிடிவி தினகரன் கோஷ்டி தான்.

நேற்று கூட அவர்கள் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததை தடுக்க முயன்ற அப்பகுதியைச் சேர்ந்த சுமதி சங்கர் என்பவரை அவர்கள் அடித்துள்ளனர்.

இது குறித்து சுமதி சங்கர் கூறுகையில், காலையில் தினகரன் ஆட்கள் 3 பேர் வந்தாங்க.

எல்லார் வீட்டுக்குள்ளேயும் போய் தொப்பி சின்னத்துல ஓட்டுப் போடுங்கன்னு சொல்லி, ஓட்டு ஒன்றுக்கு நாலாயிரம் ரூபாய் கொடுத்தாங்க.

இதை நான் பார்த்து எல்லார் கிட்டயும் சொன்னேன்.

இதை பார்த்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அவங்களோட சண்டை போட்டாங்க.

அப்போது தினகரன் ஆட்கள் எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம் என சொல்லி என் கையப் புடிச்சு முறுக்கி அடிச்சிட்டாங்க என அவர் கதறுகிறார்.

மேலும், தினகரன் தொகுதிக்கு வந்தால் அவரை வரவேற்க 400 ரூபாய் மக்களுக்கு தரப்படுவதாகவும் தொகுதி மக்கள் கூறுகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments