ஜெ.தீபாவிற்கு கொலை மிரட்டல்?

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதா உறவினர் தீபாவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலளிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, பேரவை ஒன்றை துவங்கி தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி இடுகிறார்.

தி.முக., அதிமுகவின் இரு பிரிவு, இடதுசாரிகள், நாம் தமிழர் கட்சி என மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள அரசியல் கட்சிகள் போட்டியிடும் நிலையில் தமது பேரவை கண்டிப்பாக வெற்றிவாகை சூடும் என தீபா பிரசாரத்தில் இறங்கியுள்ள நிலையில், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறி தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த புகாரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மர்ம நபர்களால் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுமாறும் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகார் வெறும் அரசியல் நாடகம் என்றும் தீபாவின் அரசியல் முதிர்ச்சியை அது காட்டுகிறது எனவும் எதிர் தரப்பினரால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments