வீதியில் கருணையின்றி கொடூரமாக தாக்கப்பட்ட நபர்: வைரலாகும் காணொளி

Report Print Arbin Arbin in இந்தியா

குஜராத் மாநிலத்தில் சாலையில் 6 பேர் சேர்ந்து கும்பலாக ஒருவரை கொடூரமாக தாக்கப்படும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகரில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணமாகி 5 ஆண்டுகளான நிலையிலும் குறித்த நபர் தமது மனைவியை தொடர்ந்து தாக்கி, சண்டையிட்டு வந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு சண்டை வந்த போது, அந்த நபர் தன் மனைவியை தாக்கியதில் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் அப்பெண் ஒரு கண் பார்வையை இழந்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அப்பெண் தன் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த விஷயங்களை கூறவே, பெண்ணின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் நடுரோட்டில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சாலையின் நடுவே இரும்பு கம்பி மற்றும் தடியை கொண்டு கருணையின்றி கொடூரமாக இத்தாக்குதல் நடத்தியுள்ளனர். அவரின் காரையும் அடித்து உடைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தின் மூலமாக பரவி தற்போது வைரலாகி வருகிறது. இதனிடையே தன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொடர்ந்து அவர் தொல்லை செய்ததாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், எஞ்சியவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவுசெய்துள்ள காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

வீடியோவை காண

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments