பள்ளி மாணவனை வீடு புகுந்து பலாத்காரம் செய்த இளம்பெண்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

கேரளாவில் 21 வயது இளம்பெண் ஒருவர் 17 வயது மாணவனை வீடு புகுந்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மெட்டில்டா (21). இவர் அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் அங்குள்ள ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 17 வயது மாணவனுக்கும் சமூகவலைத்தளமான பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளைடைவில் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மெட்டிலா, மாணவனின் வீட்டிற்கு சென்று, மாணவன் இருந்த அறையினுள் சென்று கதவை அடைத்துள்ளார்.

மாணவனின் பெற்றோர்கள் சத்தம் போட்டும், அவர் திறக்கவில்லை. இதனால் அவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை தட்டியுள்ளனர்.

ஆனால் இருவரும் கதவை திறந்தால் தற்கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர், அதன் பின் பொலிசார் சென்றுவிட்டனர்.

தொடர்ந்து அவர்கள் கதவை திறக்காததால் மாணவனின் பெற்றோர் மீண்டும் பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக வீட்டிற்கு வந்த பொலிசார் கதவை உடைத்து இருவரையும் வெளியில் கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் மாணவனின் பெற்றோர் தங்களது மகனை மெட்டிலா பலாத்காரம் செய்து விட்டதாக கூறி பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பொலிசார் மெட்டில்டாவை கைது செய்துள்ளனர்.

மேலும் பொலிசார் மாணவனை அங்குள்ள சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், அதன் பின் அவர் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments