பிறந்து சில நிமிடங்களில்..பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

Report Print Arbin Arbin in இந்தியா

பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தையை பெற்ற தாயே தண்ணீரில் மூழ்கடித்துக் கொன்ற சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்துள்ளார்.

திருமணமாகாத அப்பெண் கர்ப்பமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில் மருத்துவமனையின் குளியலறையில் இருந்து குழந்தை அழுகின்ற சத்தம் கேட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையின் நிர்வாகி மற்றும் பணியிலிருந்த 2 செவிலியர்கள் ஆகியோர் குளியலறைக்கு சென்று பார்த்துள்ளனர்.

அங்கு குளியலறையின் கதவு மூடியிருந்ததது. இதனால் கதவிலிருந்த சிறிய துவாரம் வழியாக உள்ளே எட்டிப்பார்த்துள்ளனர்.

அங்கு அந்த இளம்பெண் பச்சிளம் குழந்தை ஒன்றை பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்துக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கதவை உடனடியாகத் திறந்து குழந்தையைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அக்குழந்தை இறந்து போயிருந்தது.

குழந்தையைப் பெற்றெடுத்த அந்த இளம்பெண்ணுக்கு ரத்தம் நிற்காமல் வெளியேறிக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த இளம்பெண் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் அந்த பெண் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரைத் தொடர்ந்து கொலை செய்ததாக அந்த இளம்பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமாகாமல் குழந்தை பெற்றதால் அப்பெண் குழந்தையைக் கொலை செய்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments