கடல் கொந்தளிப்பால் பெரும் உயிர் சேதம்: பஞ்சாங்கம் சொல்லும் பகீர் செய்தி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவில் அடுத்த சில மாதங்கள் அல்லது ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பது குறித்து பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புயல் காரணமாக அடிக்கடி மழை பெய்யும். இதனால் நெல், கோதுமை போன்றவற்றின் விளைச்சல் அதிகரிக்கும்.

இந்திய ரூபாயின் மதிப்பு உயரும், பொருளாதார ரீதியில் தன்னிறைவு உண்டாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடல் கொந்தளிப்பு ஏற்படும். இதன் விளைவாக உயிர், பொருள் சேதம் ஏற்படலாம். வெளிநாட்டு முதலீடு காரணமாக இந்தியாவில் தொழில் வளர்ச்சி உண்டாகும்.

தீவிரவாதம் பெருமளவில் ஒடுக்கப்படும். மக்கள் நிம்மதியாக வாழும் நிலை ஏற்பட வாய்ப்புகள் காணப்படுகிறது. ராணுவம் பலப்படுத்தப்பட்டு புதிய ரக போர் விமானம், ஏவுகணை போன்றவை வாங்கப்படும்.

மட்டுமின்றி தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றின் விலை குறையும். பெட்ரோல், டீசல், எரிவாயு, வாசனை திரவியங்கள், தேயிலை, காபி, ஏலக்காய், முந்திரிப் பருப்பு, பூக்கள் போன்றவற்றின் விலை அதிகரிக்கும் எனவும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை சுதந்திரமாக செயல்பட்டு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும். கல்வித்தரம் சர்வதேச அளவிற்கு உயர்த்தப்பட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

மேலும் மருத்துவத்துறை நவீன மயமாக்கப்பட்டு புதிய மருந்துகள் கண்டுபிடிக்கடும். இதன் காரணமாக நோய்கள் கட்டுப்படுத்தப்படும் என பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments