தினகரனுக்கு மறுப்பு தெரிவித்த நடிகை நமிதா

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஆர்கேநகர் தொகுதியில் போட்டியிடும் தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நடிகை நமீதா மற்றும் விஜயசாந்தி ஆகிய இருவரும் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சியின் பொறுப்புகள் சசிகலா வசம் சென்றபோது அவருக்கு ஆதரவாக நடிகை விஜயசாந்தி குரல் கொடுத்தார். மேலும் தொலைக்காட்சியிலும் ஆதரவு அளித்து பேசினார்.

இந்நிலையில், சசிகலா சிறைக்கு சென்றபின்னர் அவருக்கு ஆதரவு அளிக்க விஜயசாந்தி முன்வரவில்லை. மேலும், ஆர்கேநகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், பதில் எதுவும் கூறாமல் அவர் மௌனம் காத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதிமுக கட்சியின் உறுப்பினரான நடிகை நமீதாவிடம், பிரசாரம் செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவரும் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments