கோவிலுக்குள் வைத்து 11 வயது சிறுமி கற்பழிப்பு: பொங்கி எழுந்த மக்கள்

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் புகழ்பெற்ற கோவிலுக்குள் வைத்து 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலம், பரிபாதாவில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவிலிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தின் போது கோவில் வெறிச்சோடியிருந்த நிலையில் 11 வயது சிறுமி கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

அப்போது, அப்பகுதியை சேர்ந்த Gurucharan Behera என்ற நபர் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து குளத்திற்கு அருகே அழைத்துச் சென்று கொடூரமாக கற்பழித்துள்ளான்.

மோசமான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனைியல் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளியை பிடித்த அப்பகுதி மக்கள் அவனை கொடூரமாக தாக்கி பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பொலிசில் புகார் அளித்துள்ள நிலையில் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவயிடத்திற்கு விரைந்த சப்-கலெக்டர் சிறுமியின் சிகிச்சைக்காக அரசாங்கம் சார்பில் 10 ஆயிரம் வழங்கியுள்ளார்.

எனினும், இதுபோன்ற குற்றங்கள் இனியும் நடக்காமல் தடுக்கும் வகையில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments