புகழ்பெற்ற பாடகி காலமானார்

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் புகழ்பெற்ற இந்துஸ்தானி பாடகரான கிஷோரி அமோன்சர் 84 வயதில் காலமானார்.

அவரது இல்லத்தில் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 10, 1932ம் ஆண்டு மும்பையில் பிறந்த கிஷோரி அமோன்சர், இந்துஸ்தானி இசையில் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார்.

ஒரு தனித்துவமான இசை பாணியை பகிர ஜெய்ப்பூர் கரானாவின் முக்கிய பிரதிநிதியாக திகழ்ந்தார். கிஷோரி அமோன்சர் Geet Gaya Patharon Ne, Drishti என சில திரைபடங்களில் பாடியுள்ளார்.

அவரது கலை பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிஷோரியின் மறைவிற்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments