டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்

Report Print Basu in இந்தியா

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கேநகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆர்கேநகர் தொகுதியின் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவிதினகரன், அதிமுக கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தவறாக பயன்படுத்தி வருவதாக ஆதாரங்களுடன் ஓபிஎஸ் அணியினர் தேர்தல் அணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து, தேர்தல் ஆணையம் அழைத்தால் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் நேரில் வந்து விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் ஓபிஎஸ் அணி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில், தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், கட்சியின் இணையதளத்தில் இரட்டை இலை சின்னத்தை அகற்றவில்லை என புகார் கூறப்பட்டு இருந்தது. கட்சியின் இணையதளத்தில் இரட்டை இலை சின்னத்தை அகற்றாதது குறித்து ஏப்ரல் 6ம் திகதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments