சிறைக்கு சென்றது ஏன்? வைரலாகும் வைகோ காணொளி

Report Print Arbin Arbin in இந்தியா

ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு திமுக துணை போனதை அம்பலப்படுத்தவே தாம் சிறைக்குப் போகிறேன் என மதிமுக பொதுச்செயலர் வைகோ பேசி வெளியிட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதற்காக வைகோ மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று திடீரென சென்னை எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார்.

தம் மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்; இல்லையெனில் கைது செய்து சிறையில் அடையுங்கள் என வைகோ ஒரு பரபரப்பான மனுவைத் தாக்கல் செய்தார்.

இம்மனு மீதான விசாரணையின் முடிவில் வைகோவை 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதாக நீதிபதி கோபிநாத் தெரிவித்தார்.

அத்துடன் வைகோ சொந்த ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதி கோபிநாத் கூறினார். ஆனால் வைகோ தாம் ஜாமீனில் செல்ல முடியாது; சிறைக்குப் போகிறேன் என்றார். இதையடுத்து வைகோ கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைக்கு செல்வதற்கு முன்பாக வைகோ ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வைகோ கூறியிருப்பதாவது...

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments