மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்!

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மனைவியை கடத்தி சென்று தன் நண்பர்களோடு சேர்ந்து கற்பழித்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அங்கு வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் ஆகியுள்ளது. திருமணம் ஆன சில நாட்களிலேயே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனால் மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் கணவன் அவரை தன் இரு நண்பர்கள் உதவியோடு கடத்தி சென்றுள்ளார்.

பின்னர் மூவரும் சேர்ந்து அவரை கற்பழித்துள்ளனர், அதன் பின்னர் சாலையோரத்தில் அவரை வீசி சென்றுள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து தலைமறைவாக உள்ள மூவரையும் பொலிசார் தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments