தொல். திருமாவளவன் சென்னையில் கைது

Report Print Raju Raju in இந்தியா

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்திய தொல். திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக விவசாயிகள் கடந்த 21 நாட்களாக புதுடெல்லியில் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

காவேரி மேலாண்மை அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராடுகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் விதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் இன்று சென்னையில் போராட்டம் நடைப்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவனையும், அவர் கட்சியினரையினரையும் பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments