சசிகலா படுகொலை: கணவன்- மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் நகைக்காக சசிகலா என்ற பெண்ணை கொலை செய்த தம்பதிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் இன்னசெண்ட்(46), இவர் மனைவி சசிகலா(36).

சசிகலா கடந்த 25ஆம் திகதி தனது தோழி கலா (34) என்பவரை பார்த்து விட்டு வருவதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றார்.

ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை, இதையடுத்து இன்னசெண்ட் பொலிசில் மனைவியை காணவில்லை என புகார் அளித்தார்.

இதையடுத்து விசாரணையை தொடங்கிய பொலிசார் சசிகலா, கலா வீட்டுக்கு சென்றதை உறுதி செய்து அவரையும் அவர் கணவர் முருகேசனையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் சசிகலாவை நகைக்காக கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

அவர்கள் பொலிசாரிடம் கூறுகையில், நாங்கள் செய்த வேலையில் வருமானம் பத்தாததால் குடும்ப பெண்களை மயக்கி பண ஆசைகாட்டி விபச்சாரத்தில் தள்ளினோம்.

இதனிடையில், சசிகலாவின் நட்பு எங்களுக்கு கிடைத்தது. அவரையும் விபச்சாரத்தில் நாங்கள் தள்ளினோம்.

கடந்த 25ஆம் திகதி ஒரு பெரிய மனிதர் அழகான பெண் உல்லாசத்துக்கு வேண்டும் என எங்களிடம் கேட்டார்.

உடனே நாங்கள் சசிகலாவுக்கு போன் செய்து நகைகள் அணிந்து கவர்ச்சிகரமாக வர சொன்னோம்.

அவரும் வந்து அந்த பெரிய நபருடன் உல்லாசம் அனுபவித்தார். பின்னர் சசிகலாவின் நகையை நாங்கள் மருத்துவ செலவுக்கு தேவை வேண்டும் என கேட்டோம்.

ஆனால் அவர் தர மறுத்ததால் நகைக்கு ஆசைப்பட்டு சசிகலாவை அரிவாளால் வெட்டி கொலை செய்தோம்.

கொலையை மறைக்க சசிகலாவின் உடலை வீட்டின் பின்புறம் குழிதோண்டி புதைத்தோம்.

பின்னர் மாட்டி கொண்டு விடுவோம் என்ற பயத்தில் ஐந்து நாட்கள் கழித்து பிணத்தை எடுத்து பிளாஸ்டிக் டிரம்மிப் போட்டோம்.

ஆனால் பிணத்தில் கால்கள் வெளியில் தெரிந்தது, இதையடுத்து கால்கள் இரண்டையும் துண்டாக வெட்டி டிரம்மில் போட்டோம்

பின்னர் சடலத்தை ஆட்டோவில் ஏற்றி ஊருக்கு வெளியில் கொண்டு போய் புதைத்து விட்டோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் நகையை மீட்ட பொலிசார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments