ராணுவத்தினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டால் ஊதியம்: எங்கே தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் காஷ்மீரில் காவல்துறை மற்றும் ராணுவத்தினர் மீது கல்வீச்சில் ஈடுபடும் இளைஞர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் காவல்துறை மற்றும் ராணுவத்தினர் மீது தொடர்ந்து நடத்தப்படும் கல்வீச்சு சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புப் படை வீரர்கள், அரசு அதிகாரிகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தவும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தவும் தங்களுக்கு பணம் வழங்கப்படுவதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை ஊதியமும், ஆடைகளும் சமயங்களில் காலணிகளும் கூட வழங்கப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

பாதுகாப்புப் படை வீரர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர், அரசு வாகனங்கள் மீது குறிப்பாக கல்வீசி தாக்குதல் நடத்துவதாக கூறும் அந்த இளைஞர்கள் எக்காரணம் கொண்டும் தங்களுக்கு பணம் தரும் நபர்களை காட்டிக் கொடுக்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி பெட்ரோல் வெடிகுண்டுகள் தயாரிக்க தனியாக நிதி வழங்கப்படுவதாகவும், ஒரு வெடி குண்டு தயாரிக்க 700 ரூபாய் வாங்குவதாகவும் பட் என்ற இளைஞன் தெரிவித்துள்ளான்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்தே கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் நாளொன்றிற்கு 700 முதல் ஆயிரம் ரூபாய் வரை ஊதியமாக கிடைக்கும் எனவும் அந்த இளைஞன் தெரிவித்துள்ளான்.

கல் வீச்சு சம்பவத்திற்கு எப்படி அழைப்பு வரும் என்ற கேள்விக்கு பதிலளித்த இளைஞர்கள், வாட்ஸ்-அப் குழுவில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தேவைப்படும் போது தகவல் தெரிவிக்கப்படும் எனவும் பதிலளித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments