ஓபிஎஸ் வேட்பாளர் மதுசூதனன் மீது பொலிசில் பரபரப்பு புகார்

Report Print Basu in இந்தியா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியிலிருந்து அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சி சார்பில் மின்விளக்கு சின்னத்தில் போட்டியிடும் மதுசூதனன் மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் இளைஞரணி முன்னாள் நிர்வாகி ஏ.ஆர்.பழனி என்பவர் மதுசூதனன் மீது சென்னை பொலிஸ் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில், கடந்த 1995ம் ஆண்டு மதுசூதனன் அமைச்சராக இருந்த போது போலி ஆவணங்கள் தயாரித்து நிலமோசடி செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் நிலமோசடி தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், கே.கே.நகர் வீட்டு வசதி வாரிய நிலத்தை தமது மனைவி ஜீவா பெயரில் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments