வாயில்லா ஜீவனை துடிக்க துடிக்க அடித்து கொல்லும் மனித மிருகம்: கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Basu in இந்தியா

நபர் ஒருவர் நாயை பெரிய கட்டையால் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோவில், நாய் கழுத்தில் கயிறு கட்டிய படி நபர் ஒருவர் பிடித்து வைத்துள்ளார்.

அப்போது, பெரிய கட்டையுடன் வரும் மற்றொரு நபர் கயிறை பிடித்து கொடூரமாக நாயை தாக்குகிறார். இதில், அந்த வாயில்லா ஜீவன் துடி துடித்து உயிரிழக்கிறது.

பின்னர், அந்த நபர் இறந்த நாயை கயிறு மூலம் தரதரவென இழுத்துச் செல்கிறார்.

குறித்த வீடியோவில் சுற்றியுள்ள நபர்களில் தமிழில் பேசுகின்றனர். நாயை அடித்துக் கொல்லும் வீடியோ எங்கே எடுக்கப்பட்டது, எதற்காக அதனை அடித்துக் கொன்றார், யார் இதனைப் படம் பிடித்தது என்பது போன்ற தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எச்சரிக்கை- வீடியோவை அழுத்தி பார்க்க

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments