விஜயகாந்த் எப்படி இருக்கிறார்? மனைவி பிரேமலதா பரபரப்பு பேட்டி

Report Print Raju Raju in இந்தியா

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி ஆர்.கே நகர் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார் என பிரேமலதா கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில தினங்களாகவே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு என்ன பிரச்சனை மற்றும் எப்போது அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என்பது கேள்விகுறியாகவே இருந்தது.

தற்போது இது குறித்து பேட்டியளித்துள்ள அவர் மனைவி பிரேமலதா, விஜயகாந்த் நலமாக உள்ளார்.

ஆண்டுதோறும் மேற்கொள்ளும் மருத்துவ சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் தங்கியுள்ளார்.

விரைவில் வீடு திரும்பும் அவர் ஆர்.கே நகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து பிரசாரம் செய்வார் என கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments