மலேசிய பிரதமரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்?

Report Print Deepthi Deepthi in இந்தியா

மலேசிய பிரதமர் நஜீப் நசாக் இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதில், 31 ஆம் திகதி மற்றும் 1 ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்நிலையில் அவர் ரஜினியை மரியாதை நிமித்தம் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மலேசிய பிரதமர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் ஆகியோர்களை சந்திக்க இருப்பதாகவும், மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் டெல்லி செல்லும் மலேசிய பிரதமர் நஜீப் நசாக், பாரத பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது மலேசிய பிரதமர், மலாக்கா ஆளுனர் ஆகியோர் ரஜினியை வரவேற்று விருந்தளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments