மனைவியை துடிதுடிக்க கொலை செய்தது ஏன்? கணவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

விழுப்புரம் மாவட்டத்தில் மனைவியை துடிதுடிக்க கொலை செய்தது ஏன் என்பது குறித்து அவரது கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பூமா- தளபதி ஆகிய இருவரும் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு சபரி என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில், தனது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு மீண்டும் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

அங்கிருந்து அவள் தனது தந்தையுடன் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று வந்தாள். அப்போது அவள் அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்ததால் அவளுடைய நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுபற்றி கேட்பதற்காக நேற்று முன்தினம் மாமனார் வீட்டுக்கு சென்றேன். அப்போது பூமா குளிப்பதற்காக கரும்புதோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு சென்றிருப்பதாக மாமனாரும், மாமியாரும் கூறினார்கள்.

நான் பூமாவை தேடி கரும்பு தோட்டத்துக்கு சென்ற போது, அங்கு அவள் எங்கள் ஊரை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். என்னை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். பூமாவும் தப்பியோட முயன்றார். அவளை மடக்கி பிடித்து, துப்பட்டாவால் அவளுடைய கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

இது தொடர்பாக பொலிசார் என்னை தேடுவதை அறிந்ததால் சீர்பாதநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சரண் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments