கடத்தல் ராணியாக வலம் வந்த பிரபல நடிகை அதிரடி கைது

Report Print Raju Raju in இந்தியா

செம்மரம் கடத்தலில் ராணியாக திகழ்ந்த நடிகை சங்கீதாவை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள மலை பகுதிகளில் விலை உயர்ந்த செம்மரங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.

இது சம்மந்தமாக கடந்த 2015ல் கடத்தல் மன்னன் லட்சுமணன் என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில், லட்சுமணன் சிறைக்கு சென்றதால் அவர் மனைவி சங்கீதா சாட்டர்ஜி (26) கடத்தல் தொழிலில் ஈடுப்பட்டு வந்தார்.

சங்கீதா சாட்டர்ஜி பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் , விமான பணிப்பெண்ணாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

சங்கீதா செம்மர கடத்தல் மூலம் பல கோடிகளை சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.

சங்கீதாவை கைது செய்யும் முயற்சியில் பொலிசார் இருந்த போது அவர் நீதிமன்றம் மூலம் முன் ஜாமீன் வாங்கினார்.

இந்நிலையில், முன் ஜாமீன் முடிந்த பின்னரும் அவர் பொலிசில் சரண் அடையாமல் இருந்து வந்தார்.

இதையடுத்து அவரை பிடிக்க கைது வாரண்டு பிறக்கப்பட்டது. கொல்கத்தாவில் பதுங்கி இருந்த சங்கீதாவை பொலிசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments