தமிழக அரசை இயக்குவது யார்? அதிரடி கருத்துக்கணிப்பு முடிவுகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழக அரசை இயக்குவது யார்? என்பது குறித்து நாளிதழ் ஒன்று தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் தொகுதிக்கு 75 பேர் வீதம் 234 தொகுதிகளில் மொத்தம் 17 ஆயிரத்து 550 பேரிடம் பதில்கள் பெறப்பட்டன.

கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழக அரசை இப்போதும் சசிகலா இயக்குவதாக கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு ஆம் என்று 89 சதவீதம் பேரும் இல்லை என்று 6 சதவீதம் பேரும் கருத்து இல்லை என்று 5 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கியவர்களை, சசிகலா சேர்த்துக் கொண்டது... என்ற கேள்விக்கு, கவலைக்குரியது என்று 77 சதவீதம் பேரும், உட்கட்சி விவகாரம் என்று 16 சதவீதம் பேரும், கருத்து இல்லை என 7 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

சொத்து வழக்கின் தீர்ப்பிற்கு பிறகு ஜெயலலிதா மீதான உங்கள் எண்ணம் மாறியிருக்கிறதா...? என்ற கேள்விக்கு இல்லை என்று 52 சதவீதம் பேரும் ஆம் என்று 43 சதவீதம் பேரும், கருத்து இல்லை என்று 5 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

(ஓ.பி.எஸ். அணி) இக்கட்டான சூழலில் உங்கள் எம்.எல்.ஏ. எடுத்த முடிவு சரியா...? என்ற கேள்விக்கு சரியான முடிவு என 79 சதவீதத்தினரும் தவறான முடிவு என 13 சதவீதத்தினரும் கருத்து இல்லை 8 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

(தினகரன் அணி) இக்கட்டான சூழலில் உங்கள் எம்.எல்.ஏ. எடுத்த முடிவு சரியா...? என்ற கேள்விக்கு தவறான முடிவு என 82 சதவீதம் பேரும், சரியான முடிவு என 12 சதவீதம் பேரும் கருத்து இல்லை என்று 6 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments