பாட்டிலில் தண்ணீர் குடித்த ராஜநாகம்: வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

காட்டிலிருந்து ஊருக்குள் வந்த நாகப்பாம்புக்கு பாட்டிலில் தண்ணீர் பருகிய வீடியே வைரலாக பரவி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள காய்கா கிராமத்தில் சுமார் 12 அடி நீளமுள்ள ராஜ நாகம் காட்டிலிருந்து ஊருக்குள் வந்துள்ளது.

காய்கா கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியின் காரணமாக ஊரில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இல்லை. அதனால் பாம்பு ஊருக்குள்ளே சுற்றித் திரிந்தது.

12-அடி நீளமுள்ள அந்தப் பாம்பிற்கு பயந்த பொதுமக்கள் வனத்துறைக்கு போன் செய்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அந்த பாம்பை பத்திரமாக மீட்டனர்.

காட்டிற்குள் விடுவதற்கு முன்னர் அந்த பாம்பிற்கு பாட்டிலின் மூலம் தண்ணீர் கொடுத்தனர். அந்த ராஜ நாகம் பாட்டிலின் மூலம் தண்ணீரை பருகியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments