தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய போகும் பிரபல இளம் நடிகை?

Report Print Raju Raju in இந்தியா

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரபல நடிகை எமி ஜாக்சன் பிரசாரம் செய்யவுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.

சசிகலா அணி சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன் தொடர் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தனக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரத்தை களமிறக்க அவர் முடிவு செய்துள்ளார்.

இது குறித்து தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில், மதராசபட்டணம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.

மதராசபட்டணம் படத்தில் எமி ஆங்கிலேய பெண்மணியாக, தொப்பி அணிந்து நடித்திருந்தார்.

இதனால், அந்த தொப்பிகள் மக்களிடையே மிகவும் பேசப்பட்டது. அதை கருத்தில் கொண்டு சிங்கப்பூரில் உள்ள தினகரனின் நண்பர் மூலமாக எமி ஜாக்சனை பிரசாரத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments