அப்பளம்போல் நொறுங்கிய வாகனம்.. உடல் சிதைந்து பலியான மாணவிகள்: கதறிய உறவினர்கள்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் சென்ற வேன் விபத்துக்குள்ளானதால், 4 மாணவிகள் அந்த இடத்திலே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

தமிழகத்தின் நாகா்கோவில் அருகே சுங்கான்கடையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 18 போ் வழக்கம் போல் இன்று மாலை கல்லூரியில் இருந்து தனியார் வேனில் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

டிரைவரின் அஜாக்கிரதை காரணமாக வேகமாக வந்த வேன் கட்டுபாட்டை இழந்து புலியூா்குறிச்சி என்ற இடத்தில் திடீரென்று எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியுள்ளது.

இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியதில் வேனில் இருந்த மாணவிகள் நான்கு போ் வேனுக்குள்ளே உடல் சிதைந்து பலியாகியுள்ளனர்.

மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை அறிந்து மற்ற மாணவிகளும் இறந்து போன மாணவிகளின் உறவினா்களும் சம்பவ இடத்தில் வந்து கதறி அழுதனா்.

கல்லூரி மாணவிகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பி ஓடிய வேன் டிரைவரையும் போலிசார் தேடி வருகின்றனா்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments