தீபாவின் வேட்புமனு தள்ளுபடி?

Report Print Meenakshi in இந்தியா

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ள தீபாவின் மனு தள்ளுபடி ஆகலாம் என பேசப்படுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் அமைப்பினை நடத்தி வரும் தீபா, நேற்று தண்டையார் பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி பிரவீண் நாயரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இவர் செய்த வேட்புமனு தாக்கலில் தீபாவின் கணவர் பெயர், அவரின் சொத்துமதிப்பானது சரியாக குறிப்பிடப்படவில்லை.

மேலும், அவர் ஆரம்பித்த அமைப்பின் பெயரானது இன்னும் பதிவு செய்யப்படாததால் பேரவையின் பெயரினையும் பதிவு எண்ணையும் குறிப்பிடவில்லை.

இதுபோன்ற இன்னும் சில காரணங்களால் இவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.கே.நகரில் வெற்றி பெற இயலாது என தெரிந்து கொண்டு, சதி காரணமாக தன்னால் மனு தாக்கல் செய்ய முடியவில்லை எனக்கூறி தனது ஆதரவினை பெருக்குவது அவரின் திட்டமாக இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments