சிறையில் சசிகலா திணறல்

Report Print Raju Raju in இந்தியா

பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை திட்டி நாள்தோறும் ஏராளமான கடிதங்கள் சிறை முகவரிக்கு வருவதாக சிறை நிர்வாகம் கூறியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட அதிமுக-வின் பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தமிழ்நாட்டின் மதுரை, தருமபுரி, திருச்சி, சென்னை போன்ற பல மாவட்டங்களிலிருந்து ஏராளமான கடிதங்கள் வருகிறது.

அதில், பல கடிதங்களில் ஜெயலலிதாவின் மறைவுக்கு சசிகலா தான் காரணம் என அவரை சபித்து எழுதப்பட்ட கடிதங்கள் அதிகமாக வருவதாக சிறை நிர்வாக கூறியுள்ளது.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், சிறைக்கு வரும் கடிதங்களை நாங்கள் படித்து பார்த்து விட்டு தான் கைதிகளிடம் கொடுப்போம்.

சசிகலாவை சபித்து பல கடிதங்கள் வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், ஆரம்பத்தில் கடிதங்களை படித்து வந்த சசிகலா தற்போது படிப்பதை நிறுத்தி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments