ஆர்.கே நகரில் அசிங்கப்பட்ட டிடிவி தினகரன்

Report Print Raju Raju in இந்தியா

ஆர்கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் பிரச்சார கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் மிக குறைவாக வருவதால் அதிர்ச்சியடைந்துள்ளாராம்.

சென்னையில் உள்ள ஆர்.கே நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

அதிமுக சார்பில் அதன் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளதால் அவருக்கு தொப்பி சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று மனு தாக்கல் செய்த தினகரன் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். அவர் கலந்து கொள்ளும் பிரச்சாரங்களில் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே வருகிறது.

இதை கண்டு கோபமடைந்த தினகரன் கட்சி நிர்வாகிகளை அழைத்து திட்டியுள்ளார். மேலும் மக்கள் கூட்டம் வர ஏற்பாடு செய்யுங்கள் என உத்தரவு போட்டுள்ளார்.

ஆனால் ஆர்.கே நகர் கட்சி பொறுப்பாளர்களோ மக்கள் கூட்டத்தை எப்படியாவது கூட்டலாம். ஆனால் ஓட்டுக்களை எப்படி பெறுவது என புலம்பி வருகின்றனர்.

மேலும் கட்சியினரிடையே ஒற்றுமையில்லாததால் வேட்பாளருக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் என அவர்கள் கூறி வருகிறார்கள்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments