தமிழகத்தில் விழுந்து நொறுங்கிய ஏலியன்ஸ் விண்கலம்? உயிருக்கு போராடும் பெண்

Report Print Basu in இந்தியா

தமிழகத்தில் வீடு ஒன்றின் மீது அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் வானியம்பாடி அருகே துருங்கி குப்பம் கிராமத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. இதில், புவனேஷ்வரி என்ற பெண் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லொறி ஓட்டுநரான புவனேஷ்வரியின் கணவர் வெங்கடேசன் வெளியூர் சென்றுள்ளார். சம்பவத்தின் போது இரவு புவனேஷ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அதிகாலை 4 மணியளிவில் பயங்கர சத்தத்துடன் ஒரு மர்ம பொருள் ஒன்று அவரது வீட்டின் மேல் விழுந்துள்ளது. இதில் வீடு பயங்கர சேதமடைந்துள்ளது.

ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு சத்தம் கேட்டதால், அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து தீக்காயத்துடன் போராடிய புவனேஷ்வரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து விண்வெளி ஆய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சக்தி வாய்ந்த எரிகல் ஏதேனும் வீட்டின் மீது விழுந்ததா என்றும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments