ஐ.நா இலங்கை போர்க்குற்ற தீர்மானம்: இந்தியா அதிரடி முடிவு

Report Print Basu in இந்தியா

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் அளித்துள்ளார்.

கடந்த 2015ல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்களை நிறைவேற்ற இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கப்பட உள்ளது.

இந்த தீர்மானத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் தமிழர் அமைப்புகள் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாநிலங்களவையில் நேற்று கூறியதாவது:

எங்களது நோக்கம் இலங்கை தமிழர்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாப்பதாகும். இதை இருவழிகளில் சாதிக்க முடியும். நிர்பந்தப்படுத்தியோ அல்லது புரியவைத்தோ அதை சாதிக்கமுடியும்.

இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பான உறுப்பினர்களின் மன வேதனை எனக்குப் புரிகிறது.

இலங்கை மீதான தீர்மானத்தில் பொதுக் கருத்து அடிப்படையில் செயல்பட முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments