ஆர்.கே நகரில் போட்டியிடும் கங்கை அமரனுக்கு ஆதரவில்லை: இளையராஜா மகன் அதிரடி

Report Print Raju Raju in இந்தியா

ஆர்.கே நகர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் கங்கை அமரனுக்கு தனது ஆதரவில்லை என யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இவர் இளையராஜாவின் தம்பியாவார்.

இந்நிலையில் இளையராஜாவின் இளைய சகோதரர் பாஸ்கரின் மகளான வாசுகி தேர்தலில் போட்டியிடும் கங்கை அமரனுக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

அந்த டிவீட்டில் இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜாவையும் டேக் செய்திருந்தார். அதற்கு, மறுப்பு தெரிவித்த யுவன் நான் இதை ஆதரிக்கவில்லை என டீவீட் செய்தார்.

இது டிவிட்டரில் வைரலானது. இளையராஜா - எஸ்.பி.பி விவகாரத்தில் கங்கை அமரன் இளையராஜாவை கடுமையாக சாடினார்.

அதனால் தான் இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜா அவரை ஆதரிக்க மறுத்துள்ளார் என செய்திகள் உலா வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments