ஜெ.தீபாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Basu in இந்தியா
538Shares

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் சொத்து கணக்கு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா பிறந்த நாளன்று எம்ஜிஆர் அம்மா பேரவையை தொடங்கிய ஜெ.தீபா ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், தீபா குறிபிட்டுள்ள அவரின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.

அதில் அசையும் சொத்து - ரூ.1.05 கோடி, அசையா சொத்து - ரூ.2 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2016-17ல் மொத்த வருமானம் 5 லட்சத்து 37 ஆயிரத்து 490 ரூபாய் என கணக்குக்காட்டியுள்ளார். கையிருப்பாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உள்ளது.

ராஜா என்பவரிடம் 40 லட்சம் ரூபாய், சுரேஷிடம் 20 லட்சம் ரூபாய், தினேஷ்பாபுவிடம் 10 லட்சத்து 65 ரூபாய் கடனாக வாங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருசக்கர வாகனம், 821 கிராம் தங்கம், 4 கிலோ வெள்ளி, 4 லட்சம் மதிப்பிலான வைரமும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்க்கைத் துணை வியாபாரம் செய்தவாகத் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் போட்டியிட, தீபா தாக்கல் செய்த வேட்பாளர் உறுதிமொழிப் பத்திரத்தில், கணவரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஜெயக்குமாரின் மகள் தீபா என்றே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments