நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கோபமாக வெளியேறிய தீபா

Report Print Deepthi Deepthi in இந்தியா

தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெ.தீபா, அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பாதியிலேயே வெளிநடப்பு செய்துள்ளார்.

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கியுள்ள உங்களுக்கு, உங்களுடைய கணவர் மாதவன் தரப்பில் இருந்து எதிர்ப்பு வருவதால், தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என கூறப்பட்டது.

அதற்கு தீபா, எனக்கும் எனது கணவருக்கும் இடையே சசிகலா தரப்பினர் தொடர்ந்து பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

அதற்கு, நெறியாளர், உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் இடையேயான பிரச்சனையில் வெளியில் இருப்பவர் எப்படி வரமுடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில், அதிமுகவின் சார்பில் கலந்துகொண்ட செல்லூர் ராஜீ, தங்கச்சி முதலில் உன்னுடைய வீட்டுக்காரரை சரிசெய் என்று கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த தீபா, இது எனது தனிப்பட்ட பிரச்சனை என்றும் இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கு நேரம் இல்லை என்று கூறிவிட்டு கோபமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments