இளைஞராக போனவர் திருநங்கையாக திரும்பினார்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் இளைஞராக இரு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் திருநங்கையாக பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தாமரை செல்வன், இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

அவரின் இளைய மகன் முத்துகுமார் (20), அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2015 மார்ச் மாதத்தில் முத்துகுமார் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட பொலிசார் அவரை தேடி வந்தனர்.

தற்போது இரண்டு வருடங்கள் கழித்து முத்துகுமார் சென்னையில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

சென்னைக்கு சென்று பொலிசார் முத்துகுமாரை பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். காரணம் அவர் ஆப்ரேஷன் செய்து முழு திருநங்கையாக மாறியிருந்தார்.

தன் பெயருடன் கீர்த்தனா என மாற்றியுள்ளார். பின்னர் ஊருக்கு அழைத்து செல்லப்பட்ட அவரை கண்டு அவர் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் முத்துகுமார் நீதிமன்றத்தில், நான் திருநங்கையாக சென்னையில் வாழவே விரும்புகிறேன்.

அவ்வபோது பெற்றோரை வந்து திருப்பூரில் பார்த்து செல்கிறேன் என கூறியுள்ளார். அவர் விருப்பத்துக்கு நீதிமன்றம் சம்மதித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments