மத்திய அமைச்சர் மீது செருப்பு வீசியவர் தேர்தலில் போட்டி!

Report Print Arbin Arbin in இந்தியா

சேலத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசியவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

சேலத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற மாணவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்பு பயின்று வந்தார். அவர் கடந்த 13ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டார்.

அவரது உடலுக்கு அஞசலி செலுத்த வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண் மீது சாலமன் என்பவர் செருப்பை வீசியேறிந்தார்.

இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்தபடியே சாலமன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்திய மக்கள் முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளராக உள்ள அவர் அந்த அமைப்பின் சார்பில் போட்டியிடுகிறார்.

சாலமன் சிறையில் இருப்பதால் அவரது சகோதரர் சந்தோஷ் சிறையில் இருக்கும் அவரிடம் கையெழுத்து பெற்று தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments