ஆர்.கே.நகரில் தேர்தல் நிறுத்தம்?

Report Print Arbin Arbin in இந்தியா

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி இடைத்தேர்தலை நிறுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கட்சியின் சின்னமும் பெயரும் முடக்கப்பட்டால் மட்டுமே தமிழகத்தில் பாஜக கட்சியை வலுப்படுத்த முடியும் என்ற திட்டத்தின் அடிப்படையிலேயே தற்போது மத்திய பாஜக தலைமை செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்பதற்காக தினகரன் பணத்தை தொகுதிக்குள் இறக்க ஆரம்பிப்பார், அதையே காரணம் காட்டி ஏற்கனவே அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தலை நிறுத்தியது போல ஆர்.கே.நகர் தேர்தலையும் நிறுத்துவதுதான் பாஜகவின் திட்டம் எனக் கூறப்படுகிறது.

இதுபற்றி பேசிய பாஜக பிரமுகர் ஒருவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தரப்பில்தான் அதிகளவில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது. அதில் அரவக்குறிச்சியும், தஞ்சாவூரும் மிக அதிகமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.

தற்போது ஆர்.கே.நகரில் அதையெல்லாம் விஞ்சும் அளவுக்கு பணத்தை இறக்க தினகரன் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆர்.கே.நகரில் ஒரு ரவுண்டு பணம் கொடுத்து முடித்துவிட்டார்கள்.

சின்னம் இல்லை என்றதும் இப்போது பணம் அடுத்த ரவுண்டு விளையாட ஆரம்பிக்கும். யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஆர்.கே.நகரில் பணம் கொட்டப் போகிறது.

அதையெல்லால் உடனுக்குடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியப்படுத்த எல்லா ஏற்பாடுகளையும் பாஜக ஆதரவாளர்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதிகளவு பணப் புழக்கம் இருப்பது உறுதியானால் தேர்தல் நிறுத்தப்படும். ஜெயிப்பதற்கு பயந்துகொண்டு பணம் கொடுத்தது அதிமுக என்பது உறுதியாகிவிடும் என்று சொன்ன அவர்,

பாஜகவை பொறுத்தமட்டில், தமிழகத்தில் இனி தேர்தல் என்று நடந்தால், அது தங்களுக்குச் சாதகமான தேர்தலாக மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கிறது.

தற்போது பாஜக வேட்பாளராக கங்கை அமரன் போட்டியிட்டாலும் அவரால் ஜெயிக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் டெபாசிட் வாங்குவதே கஷ்டம். அதற்கு தேர்தலையே நிறுத்திவிட்டால் பரவாயில்லை என்பதுதான் பாஜக தலைமையின் முடிவாக உள்ளது என அந்த பாஜக பிரமுகர் போட்டுடைத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments