நடிகர் சரத்குமார் திடீர் பல்டி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிரடி முடிவு

Report Print Basu in இந்தியா

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில திடீர் பல்டி அடித்துள்ளார்.

சமீபத்தில் ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று ஆதரவு தெரிவித்திருந்த சரத்குமார். தற்போது, ஆர்.கே.நகரில் தனித்து போட்டியிட கட்சி சார்பில் வேட்பாளரை களமிறக்கியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 12ம் திகதி நடைபெறவுள்ளது. இன்றுடன் வேட்மனு தாக்கல் முடிவடைந்தது. ஆர்.கே.நகரில் போட்டியிட மொத்தல் 127 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திமுக, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, தீபா, மார்க்சிஸ்ட், தேமுதிக, பாஜக, நாம்தமிழர், தீபா கட்சி, என பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

வேட்பாளராக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.அந்தோணி சேவியர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சரத்குமார் கூறியதாவது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள கட்சி தனித்தே போட்டியிடும். இந்த இடைத்தேர்தலில் எங்கள் தனித்துவத்தை நிரூபிப்போம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments