ராஜாஜி அரங்கில் இருந்த ஜெயலலிதாவின் உடல் மெழுகு பொம்மையா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடல் மெழுகு பொம்மையாக என சந்தேகமாக உள்ளது என எம்ஜிஆர் நம்பி என்பவர் கூறியுள்ளார்.

அனைத்து இந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள எம்ஜிஆர் நம்பி என்பவ இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய இவர், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களும் நாடகம்தான் நடந்தது.

செப்டம்பர் 22ஆம் திகதி அன்றே ஜெயலலிதா உடலை மறைத்துவிட்டார்களோ என்ற சந்தேகம் உள்ளது. டிசம்பர் 6ஆம் திகதி ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயலலிதா உடல் மெழுகு பொம்மையா என சந்தேகப்படுகிறேன்.

மேலும், பதவியில் இருக்கும்வரை ஓ.பன்னீர்செல்வம், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது பதவி போன பிறகு நியாயம் கேட்டு போராடுவதுபோல் நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments