பெண்ணை கத்தியால் குத்திய இளைஞனை விரட்டி பிடித்த நாய்கள்: ஹீரேவாக கொண்டாடும் மக்கள்

Report Print Basu in இந்தியா

சென்னையில் பட்டப்பகலில் இளம் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க முயன்ற இளைஞரை இரண்டு நாய்கள் விரட்டி பிடித்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சுஷ்மிதா என்ற பெண் முன்விரோதம் காரணமாக ரகுநாத் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தின் போது விடுதியை விட்டு வெளியே வந்த சுஷ்மிதாவை பைக்கில் தலைகவசம் அணிந்து வந்த ரகுநாத் கத்தியால் குத்தியுள்ளார்.

அங்கிருந்தவர்கள் அவனை பிடிக்க முயன்ற போது கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இந்நிலையில் சம்பவியிடத்தை விட்டு தப்பிக்க முயன்ற போது அங்கிருந்தவர்கள் இரண்டு நாய்களை ஏவி விட்டுள்ளனர்.

நாய்கள் ரகுநாத்தை விரட்டி செல்ல அவன் நிலை தடுமாறி விழுந்துள்ளான். பின்னர் அங்கிருந்தவர்கள் அவனை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சுஷ்மிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளியை விரட்டி பிடித்து நாய்களை அப்பகுதி மக்கள் ஹீரேவாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments