விமான ஊழியரை செருப்பால் அறைந்த எம்.பி.: டெல்லியில் பரபரப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

ஏர் இந்தியா ஊழியரை சிவசேனா எம்.பி ரவீந்திர கெயிக்வாத் செருப்பால் அறைந்த செயல் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் உஸ்மானாபாத் தொகுதி மக்களவை உறுப்பினராக இருப்பவர் சிவசேனா கட்சியை சார்ந்த ரவீந்திர கெய்க்வாத். இவர் இன்று காலை புனேவில் இருந்து டெல்லி செல்லும் ஏஐ 852 ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார்.

பிசினஸ் கிளாஸில் டிக்கெட் எடுத்திருந்த அவருக்கு எகானமி கிளாஸில் சீட் ஒதுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர் விமான ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் அந்த ஊழியர் மீது ரவீந்திர கெய்க்வாத் கை நீட்டும் அலவுக்கு வளர்ந்துள்ளது. அதன் பிறகு, விமான ஊழியரை ‘25 முறை’ தன் காலணியால் அறைந்துள்ளார்.

இந்த நிலையில் காலணியால் விமான ஊழியரை அடித்ததை ஒத்துக்கொண்ட எம்.பி கெயிக்வாத், தான் மன்னிப்பு கோர முடியாது என்றும் ஏர் இந்தியா நிர்வாகம் தான் தன்னிடம் மன்ணிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஏர் இந்தியா நிர்வாகம், எம்.பி ரவீந்திர கெயிக்வாத் பிசினஸ் கிளாஸில் டிக்கெட் எடுத்திருந்தாலும் அதனை எகானமி கிளாஸ் மட்டும் இருக்கும் விமானத்திற்கு மாற்றி கொண்டார் எனவும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தது.

சிவசேனா எம்.பி-யின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments