அதிமுகவிலிருந்து விலகினார் பிரபல கொமெடி நடிகை ஆர்த்தி

Report Print Raju Raju in இந்தியா

பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

திருப்பதி, படிக்காதவன், வில்லு போன்ற பல திரைப்படங்களில் நடித்து புகழ்ப்பெற்றவர் நடிகை ஆர்த்தி.

இவர் கடந்த 2014ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

பின்னர், நடைப்பெற்ற தேர்தல்களில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து பெற்று தொடர் பிரசாரங்களில் ஈடுப்பட்டு வந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கட்சியின் நடவடிகைகளில் ஒதுங்கியே இருந்த ஆர்த்தி தற்போது அதிமுகவிலிருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ஜெயலலிதா இல்லாத கட்சியில் இருக்க விரும்பவில்லை. அதிமுகவின் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments