சிறுமி ஹாசினி கொலை வழக்கு: குற்றவாளிக்கு நீதிமன்றம் காட்டிய அதிரடி

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்காட்டில் வசித்து வந்தவர் ஹாசினி (7)

அவர் வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த் (23) என்ற பென்பொறியாளர் ஹாசினியை தன் வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்னர் அழைத்து சென்று கற்பழித்துள்ளார்.

பின்னர் ஹாசினி சத்தம் போட்டதால் போர்வையால் சுத்தி அவரை கொலை செய்தார். பின்னர் புதருக்குள் சடலத்தை தீவைத்து கொளுத்தினார்.

இதையடுத்து பொலிசார் தஷ்வந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமீனில் அவர் விடுவிக்கப்படுவாரா என எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த வேளையில் தற்போது தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் தஷ்வந்தால் ஜாமீனில் வெளியில் வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments