தந்தையான 12 வயது சிறுவன்: இந்தியாவின் இளம் வயது தந்தை

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரள மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தந்தையாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத 12 வயது சிறுவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவிலேயே இளம் வயது தந்தையாக இச்சிறுவன் கருதப்படுகிறான்.

இதுகுறித்து திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்து கல்லூரியின் பேராசிரியர் Dr. P.K. Jabbar கூறியதாவது, இச்சிறுவன் இந்த வயதிலேயே தந்தையாகுவதற்கு Precocious puberty காரணமாகும்.

அதாவது, சிறுவர்களாக இருக்கும் இவர்களது உடல் பருவமடைதால், இது பெண் குழந்தைகளுக்கு 8 வயதிலும், ஆண் குழந்தைகளுக்கு 9 வயதிலும் நடக்கிறது.

இச்சிறுவன், மிக சிறிய வயதிலேயே பருவமடைந்துள்ளான். மேலும் டிஎன்ஏ பரிசோதனையின் மூலமும் இவன் தான் அந்த பெண்குழந்தைக்கு காரணம் என தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.

இந்நிலையில், POCSO (The Protection of Children From Sexual Offences) சட்டத்தின் கீழ் பொலிசார் இச்சிறுவனை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments