மின்கம்பம் சின்னத்தை பன்னீர் செல்வம் தெரிவு செய்ததன் பின்னணி என்ன?

Report Print Deepthi Deepthi in இந்தியா

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதையடுத்து, ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை சசிகலா மற்றும் பன்னீர் செல்வம் ஆகிய இரு தரப்பினரரும் பயன்படுத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, சசிகிலா அணியினருக்கு தொப்பி சின்னமும், பன்னீர் செல்வம் அணியினருக்கு மின் கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலை போன்று இருப்பதால் மின்கம்பத்தை பன்னீர் செல்வம் தெரிவு செய்துள்ளார் என அவரது அணியை சேர்ந்த பிஎச் பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலில் வெற்றிபெறுவதற்கும் இது கைகொடுக்கும் எனவும் ஒபிஎஸ் தரப்பால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான மதுசூதனன் மனுத்தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments