சிறுத்தையிடம் சண்டையிட்டு மகனை காப்பாற்றி வீரப்பெண்

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் பெண் ஒருவர் சிறுத்தையிடம் சண்டையிட்டு தனது 3 வயது மகனை காப்பாற்றிய சம்பவம் நெகிழவைத்துள்ளது.

மும்பை, சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்காவிற்கு அருகே உள்ள பகுதியிலே குறித்த நிகழ்வு நடந்துள்ளது. 23 வயதான பிரமிளா ரிஞ்சித் என்ற பெண்ணே இவ்வாறு தனது குழந்தை காப்பாற்றியுள்ளார்.

சம்பவத்தின் போது சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. சிறுத்தையை பார்த பிரமிளா ஓடியுள்ளார். பிரமிளாவின் பின்னார் அவருடைய 3 வயது மகன் பிரணாய் ஓடிவந்துள்ளார்.

பிராணயை தாக்கிய சிறுத்தை குழந்தையை காட்டுக்குள் இழுத்துச்செல்ல முயன்றுள்ளது. குழந்தை சிறுத்தையிடம் சிக்கியது தெரியாமல் ஓடிய பிரமிளா மகனின் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், சிறிதும் தாமதிக்காமல் சிறுத்தை மீது பாய்ந்து சண்டையிட்டு குழந்தையை காப்பற்றியுள்ளார். எனினும், சிறுத்தை ஓடாத நிலையில் பிரமிளா பயங்கர சத்தத்தில் கூச்சலிட இதை கேட்ட சிறுத்தை பயந்து ஓடியுள்ளது.

இதனையடுத்து மீட்கப்பட்ட சிறுவன் பிரணாய் மருத்துவமனை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments