சசிகலா- ஓபிஎஸ் அணிக்கு புதிய சின்னம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Basu in இந்தியா

அதிமுக இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டதை தொடர்ந்து சசிகலா, ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தையும், ஓபிஎஸ் அணிக்கு மின் கம்பம் சின்னத்தையும் ஒதுக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் கட்சியின் பெயராக ஓபிஎஸ் அணிக்கு அஇஅதிமுக புரட்சி தலைவி அம்மா எனவும் அறிவித்துள்ளது.

சசிகலா- ஓபிஎஸ் புதிய சின்னம்? தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை

அதிமுக இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டதை அடுத்து ஆர்.கே.நகரில் போட்டியிடும் சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் புதிய சின்னம் மற்றும் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை செய்துள்ளனர்.

ஓபிஎஸ் அணி தரப்பில் அம்மா.அ.தி.மு.க என கட்சிபெயரையும், சின்னமாக இரட்டை விளக்கு பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா அணி அ.தி.மு.க அம்மா என கட்சிம் பெயரையும் கிரிக்கெட் பேட், ஆட்டோ ரிக்‌ஷா, கத்திரிக்கோல் ஆகிய சின்னங்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments